சோழிய வேளாளர் : சோழியர் பெயர் காரணம்

சோழிய வேளாளர்கள்



முதலில் சோழிய எனும் சொல்லுக்கான பொருளையும் சொற்பிறப்பியலையும் பார்ப்போம். சோழியர் எனும் சொல் பொதுவாக சோழ வேந்தர்களையும் சோழிய வேளாளர்களையுமே குறிக்கும்.

இச்சொல்லானது,கோழி எனும் சொல்லில் இருந்து உருவானது தான். சோழ மன்னர்களை கோழி கோன் கோழியர் கோன் என சங்க இலக்கியம் முதல் பிற்கால சோழர்களான கண்டராதித்த சோழன் வரை அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.

எ.கா : "கோழி வேந்தன் தஞ்சையர் கோன் கண்டராதித்தன்"

இதன் வழியாகவே கோழி - கோழியர் - சோழியர் - சோழர் என்று முற்றுகிறது.

திருக்கோழியூர் என அழைக்கப்பெற்ற இன்றைய உறையூர்,திருச்சி

உறையூர் - முற்கால சோழர் தலைநகரம்

இதில் கோழி கோழியர் என்பதற்கான பொருள் கோழி எனும் பறவையை குறிப்பது கிடையாது. வடநாட்டில் இன்றும் கோழி எனும் பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

அந்த கோழி இனமக்களை போரிட்டு வென்றதாலையே கோழி கோன்,கோழியர் கோன் என பெயர் பெற்றனர்,காளையை வழிபடும் சோழ வேந்தர்கள்.

இன்று வடநாட்டில் கோலி பழங்குடி இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்,அந்த சமூகத்தின் தொழில் மீன்பிடித்தலும் உழவுத்தொழிலும்.

இந்த இனமக்களை போரிட்டு வென்ற வேளாளர்களே சோழிய வேளாளர்கள். இன்று தமிழகத்திலும் அதே கோலி இனத்தவர்கள் பரவர்,பரதவர்,வலைஞர் இனமாக விவசாயத்தையும் மீன்பிடித்தலையும் தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

வடநாட்டு கோலி இன மக்கள் இவர்களை முதிராஜ் கோலி என்று அழைக்கின்றனர்.







Comments

Popular posts from this blog

சோழிய வேளாளர் கங்கை குலம் கிடையாது

சிந்துசமவெளியில் சோழர்கள்