சோழிய வேளாளர் கங்கை குலம் கிடையாது
சோழநாட்டு சோழிய வேளாளர்கள் தங்களை எந்த காலத்திலும் கங்கை குலம் என்றோ கங்க வம்சம் என்றோ காராளர் என்றோ சொல்லிக்கொண்டதில்லை.
![]() |
சோழிய வேளாளர்கள் கங்கை குலம் கிடையாது. |
அப்படியிருக்க கங்கை குலம் காராளர் என சொல்லிக் கொள்ளும் கொங்கு வேளாளர்கள் சோழ நாட்டில் இருந்து குடியேறியவர்கள் என்று பரப்பப்படுகிறது.
சோழராட்சியில் தொண்டமண்டலத்தில் இருந்து தான் வேளாளர்கள் குடியேறினர், அதனால் பொதுவாக சோழ நாடு என்று சொல்லல் ஆகாது.
சோழர்கள் களப்பிரரை வீழ்த்தி செந்தலை எனும் சிற்றூரில் முடக்கினர். செந்தலை வேளாளர் தென்திசை வேளாளர் என்று எந்த காலத்திலும் சோழிய வேளாளர்கள் சொல்லிக் கொண்டதில்லை.
களப்பிரர்கள் பல சாதிகளில் கலந்துவிட்டார்கள் ஈசநாட்டு கள்ளர் வல்லம்பர் முத்தரையர் வேட்டுவர் இடையர் என இத்தனை சாதிகளில் கலந்துவிட்டார்கள்.
மற்ற அனைத்து வேளாளர்களுக்கும் சுத்த சோழிய வேளாளர்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. மந்தை சோழிய வேளாளர்கள் என்பவர்கள் அவர்களுக்கென தனி சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்கள்,அவர்கள் சுத்த சோழியருடன் எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லை.
கொடிக்கால் வேளாளர்கள் சோழிய வேளாளர்கள் கிடையாது. வெற்றிலை கொடிக்கால் விவசாயம் பெரும்பான்மையாக செய்வது அவர்களே.
சோழிய வேளாளர்களில் சிலர் அந்த வியாபாரத்தை செய்கிறார்கள்.ஆனால் அவர்கள் தங்களை கொடிக்கால் வேளாளர் என சொல்லிக்கொல்வது கிடையாது.
சோழிய வேளாளருக்கு மற்ற வேளாளருக்கும் இருக்கும் வித்தியாசங்கள்
அவர்கள் காராளர் என்று சொல்லிக் கொள்வதில்லை
கங்கை குலம் என்றும் சொல்வதில்லை
மற்ற வேளாளர் போல் கணவனை இழந்த விதவைகள் வெள்ளை சிலை அணியமாட்டார்கள்
சோழிய வேளாளர்கள் இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.
மற்றைய வேளாளர்கள் இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் இன்றைய காலங்களில் சிலர் எரிக்கும் வழக்கத்திற்கு வந்தவர்கள்.
சோழிய வேளாளர்களுக்கு புதைக்கும் வழக்கமே கிடையாது.
சோழிய வேளாளர்கள் உழுவித்திண்ணும் வேளாளர்கள், வயல்களில் விவசாயம் செய்யாதவர்கள்.
Comments
Post a Comment