சிந்துசமவெளியில் சோழர்கள்
இந்த தகவல்கள் HENRY HERAS போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களின் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.அதில் உள்ள தகவல்கள் தொடர்ச்சியற்றதாக தனித்தனியாக இருப்பதனால், அதை நாம் தொடர்பு படுத்தி, கொண்டு வந்த தகவலாவது,
![]() |
பசுபதி சின்னம் |
அந்த அடையாளச் சின்னங்களை படத்தில் காணலாம்.
சூரிய வம்ச வேளாளர்,சந்திர வம்ச வேளாளர் என சிந்துசமவெளியிலேயே இருபிரிவை கொண்டவர்கள் வேளாளர்கள்.
இரண்டு பிரிவுகளிலும் தனித்தனி மன்னர்களை குறிப்பிடுகின்றனர்.மற்ற இனக்குழுக்களுக்கு தலைவர் எனும் குறிப்புதான் கிடைக்கிறது மன்னர் என்ற யாதொரு குறிப்பும் இதுவரை கிடைக்கவில்லை.
இதில் சூரிய வம்ச வேளாளர்களின் மன்னனாக மூமக குடை வேளாளரில் கொடி எனும் பெயர் இடம்பெறுகிறது,
மேலும்,அதில் பல போர் வெற்றிகளை பற்றிய நிகழ்வுகளும் இடம்பெறுகிறது.
அதில் ஒன்று, சிங்கம் மற்றும் காளை அடையாளத்தைக் கொண்ட இனம் கோழி அடையாளத்தை கொண்ட இனக்குழுவை வெற்றி பெற்று விடுகிறது.
இப்பொழுது,நாம் சங்க கால சோழர்களை கவனத்தில் எடுத்தால், பெரும்பாலும் மூவேந்தர்களை பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள் காலவரையற்றதாகவும் வரையறுக்கப்படாத காலத்தில் நடந்தவற்றையாகவுமே குறிப்புகள் காணப்படும்.
சோழர்கள் சிந்து சமவெளியில் காளை அடையாளத்தை கொண்ட சூரிய வம்ச வேளாளர்களின் (அரச பரம்பரையாக) தான் இருக்க வேண்டும்.
சங்கால சோழர்களில் காளை அடையாளங்கள்!
☀️முடிகோமெய் காளையன் தகையன்
☀️இளங்கோக்கீழ் காளையன் தகையன்
☀️காளையன் குடிங்கியன்
☀️நெடுங் காளையன் தகையன்
☀️உதிவேள் காளை தகன்
☀️நன்னதட் காளை தகன்
இப்பெயர்களின் மூலம் இவர்கள் சிந்துசமவெளியில் இருந்த காளையை அடையாளமாக கொண்டவர்கள் என அறியமுடிகிறது.
போரில் வெற்றிப் பெற்ற மன்னன் தோற்றுப் போன மன்னரின் அடையாளத்தை,பட்டமாக தங்கள் பெயரில் சேர்ப்பது வழக்கம்.
அதே போல காளை அடையாளத்தை கொண்டவர்கள் கோழி இனமக்களை வெற்றி பெற்றனர்.
அவ்வாறு கோழி இனத்தை வென்றவர்கள், காளையை வழிபட்ட இந்த அரச வம்சம் தான் கோழியர் எனும் பட்டத்தை தரித்த வேளாளர்கள். ஞ
அந்த கோழியரே காலப்போக்கில் சோழியர் சோழர் என்றாயிற்று.அதன் காரணத்தினாலே சோழர்களை கோழி வேந்தன் கோழி கோன் என்றழைக்கின்றனர்.
பின்னர்,சோழர்கள்(கோழியர்) யானை அடையாளம் கொண்ட மக்களை வீழ்த்தினர்.
இது உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பதியபட்டது மற்றும்,முழுக்க முழுக்க சிந்துசமவெளி நாகரித்தை ஒத்த சித்திர கல்வெட்டாகும்.
இக்கல்வெட்டை சிந்துசமவெளியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இது இரு பிரிவினருக்கிடையே நிகழ்ந்த போரை வெளிக்கொணர்கிறது.
யானை சின்னம் களப்பிரர்களையும் மற்றும் நாக இனமான குறும்பர்களையும் குறிக்கிறது.
Comments
Post a Comment