வேளாளர் - சிந்துசமவெளி
நேற்றைய தினம் மதுரையை சேர்ந்த கார்காத்தார் சாதியை சேர்ந்த புலவர் கார்த்திக் ராஜா வின் காணொளியைப் பார்க்க நேர்ந்தது.அதில் அவர் கூறிய முக்கிய கருத்தாக பார்ப்பது வேளாளர் என்பது சூத்திரர் கு உரிய வர்ணம் என்பதைத் தான்.
கார்காத்தார் என்பவர்கள் வேளாளர் இல்லை என்பதற்காக வேளாளரை வர்ணமாக மாற்றுவது பல கேள்விகளையும்,சந்தேகத்தையும் எழுப்புகிறது.
வேளாளர் இந்த பதம் HENRY HERAS ன் VELLALAS IN MOHENJADARO நூலில் தெளிவான சொற்பிறப்பியலை வரையறுத்து கூறியிருக்கிறார்.
இதில் கூறியிருப்பதாவது வேலன்,வேலாள்(singular) என்பது வேளாளர் இனத்தை சேர்ந்த ஒரு தனி ஆளையும்
வேளீர் என்பது அந்த இனத்தை சேர்ந்தவர்களை மொத்தமாக,பன்மையில் (plural) வேளீர் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சொற்பிறப்பியல் ஒரு அடிப்படையான மூகாந்திரத்துடனும் அறிவுடனும்,வரையறுக்கப்பட்டிருக்கிறது.
வேள்,வேளாள்,வேளீர் போன்றவை ஒரு இனத்தை சிந்துசமவெளியில் குறிக்க, பிந்தைய தொல்காப்பியத்தில் வேளாளரை வர்ணமாக்கிய உரையாசிரியர்களை கண்டு நகைப்பே மிஞ்சுகிறது.
வேள்,வேளாண்,வேளாளன் சூத்திரராக இருந்தால்,அவை சங்ககால சோழர்களுக்கு முடிசூடிய அரசபெயராக இருந்திருக்கும்,ஆரம்பத்திலேயே வேளாளர் சூத்திரர் எனக் கூறும் வாதம் சுக்கு நூறாகி விடுகிறது.
வேள்,வேளாண் பெயர் கொண்ட சங்ககால சோழ அரசர்கள் :
☀️ வேங்கை நெடுவேல் வாரியன் - 2614
☀️வேள்கால் குங்கியன் - 2630
☀️மெய்வேள் வாரியன் - 2590
☀️சாமழி சோழிய வேளாண் - 2515
☀️வென் வேள் மாந்தி - 2445
☀️மெய்வேள் பகற்றாற்றி -2330
☀️இருவேள் செம்பியன் - 895
☀️வெண்வேள் சென்னி -830
☀️பிளன் செம்பிய சோழியன் - 615
ஆக,வேள்,வேளாண்,வேளீர் என்பது அரச மரபு பெயராகவே இருந்திருக்கிறது
இந்த அரச மரபுப் பெயர் திடிரென தெல்காப்பியத்தில் எப்படி நான்காவது வரணத்திற்கு மாறியது என்பது கேள்விக்குறியது!
Comments
Post a Comment