யார் சூத்திரர்?
சூத்திரர் என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட வர்ணம்.அதன்படி சூத்திரர்கள் தீட்டுசாதிக்காரர்கள். சூத்திரர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் போன்றவை ஆரியர்களின் மனநோய் கருத்துகள்.
பக்தி இலக்கிய காலம் முதல் கடந்த நூற்றாண்டு வரை சூத்திரர் சற்சூத்திரர் என சிலர் பெருமைப் பட்டு புத்தகமும் செய்யுளும் இயற்றிய வரலாறு உண்டு.
அந்த வரலாறு சோழியர்களான சோழ வேளாளர்களுக்குப் பொருந்தாது.
ஏனென்றால்,கடந்த நூற்றாண்டில் கூட ஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை என்று மூடத்தனம் மிக்க முட்டாள் கூட்டத்திற்கு பொடனியில் தட்டி உச்சிமயிர் சிலிர்க்க உரக்க சொல்லியவர் மறைமலையடிகள்.
ஏன் சூத்திர வர்ணம் சோழியருக்கு பொருந்தாது?
முற்கால சோழர் காலத்தில் இந்த சூத்திர வர்ணம் இருந்ததா என்றால் இல்லை.ஆனால்,தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சிலர் குலமக்கள் குடிமக்கள் தினைமக்கள் வினைமக்கள் போன்ற நால்வகை பகுத்தலை எழுதியுள்ளனர்.
அதில் குலமக்களின் படிநிலை
அரசர்,அந்தணர்,வணிகர்,ஏனையோர்ஏனையோர்
ஏனையோருக்கு பதில் வேளாளர் எப்பொழுது வந்தார்கள் என்று கேட்டால் எனக்கு தெரியாது.
ஆனால்,முற்கால சோழர்களின் தலைநகரான,உறையூரில் சோழர்களின் கோட்டை இங்குதான் இருந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிற உறையூர் வெக்காளியம்மன் கோவிலின் பூசாரிகள் சோழிய வேளாளப் பிள்ளைமார்கள்.
அதாவது முற்கால சோழ அரச வம்சம் ஆண்ட கோட்டையில் இன்றும் அந்தணர்கள் சோழிய வேளாளப் பிள்ளைமார்கள்.
![]() |
தாயவள் வெக்காளி✨️❤️ |
சோழிய வேளாளப் பிள்ளைமார்களின் குலதெய்வமான ஆதிகாமாட்சி கோவில் 7 தளங்கள் அதில் 6 கொல்லிமலைக்கு கிழக்கிலும் மீதி 1 கொல்லிமலைக்கு மேற்கிலும் உள்ளது.
இதில் மூலக்கோவிலாக சொல்லப்படும் திருச்சி மாவட்டம் வைரிசெட்டிப்பாளையம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில், இதனை முதன்மையாகக் கொண்ட அத்தனை கோவில்களிலும் அவர்கள் சொல்வது,ஆதி அந்தணர்கள் சோழ வேளாளர்களே என்பது தான். அதற்கான சுவடிகளை இன்றும் கோவில் குடிகள் பராமரித்து வருகின்றனர்.
இப்படிபட்ட மனநிலை கொண்ட சோழிய வேளாளர்களுக்கு எக்காலத்திலும் சூத்திர வர்ணமும் பொருந்தாது,ஏனைய எத்தனை ஆரிய வர்ணமும் பொருந்தாது.
பிற்கால சோழர்கள் ஹிரண்ய கர்ப வேள்வி நடத்தினர், சமற்கிருதத்தை எதிர்க்கவில்லை அதே சமயம் இதெல்லாம் களப்பிரர் வருகைக்கு பின்னரே தமிழகத்தில் தலைதூக்கியது. பெருமையை எந்தளவுக்கு கொண்டாடுகிறோமோ அதே அளவு தவறுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அதை திருத்திக் கொள்ள வேண்டும்.
மறைமலையடிகள் திருத்திவிட்டார்!
We are not same bro🔱😉
Comments
Post a Comment