ஆதி அந்தணர்!
ஆதி அந்தணரா? அதென்ன ஆதி அந்தணர்!
![]() |
ஆதிகாமாட்சி அம்மன் |
எனது தம்பி செந்தில்வேலவனுக்கு பிறந்த நாள் என்பதால்,இன்று புலியஞ்சோலைக்கு அருகில் இருக்கும்,ஆதிஅன்னகாமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றோம்.
திங்கள்,வெள்ளி மட்டுமே கோவில் சன்னதிகள் திறந்திருக்கும் எனும் நேரப்பலகையை பார்த்தவுடன் மகிழ்ச்சி,ஏன்னென்றால் இன்று வெள்ளி.
கோவில் நடை திறந்திருக்க சன்னதிகளும் திறந்திருந்தன,மற்ற நாட்களில் சன்னதிகள் மூடப்பட்டிருக்குமாம்!
திரைகள் மூடப்பட்டு காட்சியளித்த சன்னதிகள்,எங்கள் கண்கள் பூசாரிகளை தேடியது..
காவி வேட்டி அணிந்த இளைஞர்கள்,சுத்தம் செய்வதும் பக்தர்களுக்கு பிராசாத உணவை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது தான் பிரதாப் பெரியண்ணன் பரம்பரை என்று கோவிலுக்கான விதிமுறைகள் கொண்ட பலகை கண்ணில் பட்டது.
கோவிலில் மற்ற சன்னதிகளை பார்க்கலானோம்,அதில் சில சன்னதிகள் பலகை போன்ற வடிவில் கொண்ட நடுகல் போன்றவை வீற்றிருந்தது.
ஒரு பெரியவர் லேசாக நடுங்கும் கைகளுடன்,கோவில் நிலைகளில் வடிக்கப்பட்டிருந்த தங்கத்தால் ஆன ராமம்,ஆழி,சங்கு அடங்கிய பகுதியை படம் பிடிக்க,பூசை முடிந்தவுடன் படம் எடுக்குமாறு அனுமதி மறுத்தான் கோவில் குடியை சேர்ந்த இளைஞன்.
கோவிலிக்கு மற்றொரு கன்னட குடும்பத்தினர் வர இவர் கன்னடமா என கேட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
பூசை தொடங்கியது ஒவ்வொரு சன்னதியாக பூசை நடக்க..
பெரியவர் கூட்டத்தை பார்த்து மாசி பெரியண்ணன் என்பவர் மன்னன்,அவர் காத்தவராயர்,எதுமலை கருப்பன்,வைரிசெட்டி களுடன் சேர்ந்து இந்த இடத்தை ஆண்டவர்,அவருக்கு உணவிட்டவள் அன்னகாமாட்சி என பெயர் பெற்றாள் பெருமாள் பக்கபலமாக இருப்பதாக,அவருக்கு கோவில் எழுப்பினார் என கூறும்பொழுதே செந்தில் சிரித்தான்.
ஒருவழியாக அனைத்து சன்னதியிலும் பூசை முடிந்து முருகன் சன்னதி அருகே நின்றிருந்த தலைமை பூசாரியிடம் தன்னைப் பற்றி விளக்க முனைந்தார் பெரியவர்,நான் கன்னடன் எனக்கு சாதி கிடையாது நான் சாது,ஐயர் குடும்பத்தில் பிறந்ததாக சொல்கிறார்கள்,நான் ஐயர் இல்லை சாது என கூற..
பூசாரி,சட்டென தனது குரலை உயர்த்தி, முகம் சுழிக்காது மெல்லிய சிரிப்புடன்,ஆதி அந்தணரே சோழ நாட்டு வேளாளர் தான்,.ஆதி அந்தணரே சோழ நாட்டு வேளாளர்தான்,இந்த கோவில் தோன்றி நாங்க தோன்றுனோமா இல்லை நாங்கள் கோவில் தோன்றியதா என்பது போல இருக்கும் பெரியண்ணன் பரம்பரை நாங்கள்
ஆதிசைவர் சிவாச்சாரியார் லாம் பின்னாலில் வந்தது!மாசி பெரியண்ணன் சிவனின் அம்சம் நாமம் பூசப்பட்டதற்கு பிற்கால காரணம் இருக்கு இப்ப சொல்ல முடியாது என்று தன் கம்பிரக் குரலில் உரைக்க..இங்கு கொடுக்கும் பலி மாசி பெரியண்ணனுக்கு கிடையாது லாட சன்னாசி எனும் வரம்பெற்ற தவமுனிக்கானது..
ஓலைச்சுவடி இருக்கு இப்ப காட்ட முடியாது பூசை நேரம் முடிந்தவுடன் வாங்க தெளிவா காட்டுறேன்.கூட்டத்தினிரிடம் அமைதியும்,ஒருவித மிரட்சியும்..
பெரியவருக்கு,முகம் வாடிவிட்டது உடன் கோவிலுக்கு வந்தவர்களை காட்டி இவர்கள் உங்க இதுதான்.காமாட்சி குலதெய்வமென்று சொல்லிவிட்டு மனமில்லாமல் சிரித்து விட்டு வெளியே சென்றார்.
Comments
Post a Comment