ஆதி அந்தணர்!

ஆதி அந்தணரா? அதென்ன ஆதி அந்தணர்! ஆதிகாமாட்சி அம்மன் எனது தம்பி செந்தில்வேலவனுக்கு பிறந்த நாள் என்பதால்,இன்று புலியஞ்சோலைக்கு அருகில் இருக்கும்,ஆதிஅன்னகாமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றோம். திங்கள்,வெள்ளி மட்டுமே கோவில் சன்னதிகள் திறந்திருக்கும் எனும் நேரப்பலகையை பார்த்தவுடன் மகிழ்ச்சி,ஏன்னென்றால் இன்று வெள்ளி. கோவில் நடை திறந்திருக்க சன்னதிகளும் திறந்திருந்தன,மற்ற நாட்களில் சன்னதிகள் மூடப்பட்டிருக்குமாம்! திரைகள் மூடப்பட்டு காட்சியளித்த சன்னதிகள்,எங்கள் கண்கள் பூசாரிகளை தேடியது.. காவி வேட்டி அணிந்த இளைஞர்கள்,சுத்தம் செய்வதும் பக்தர்களுக்கு பிராசாத உணவை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது தான் பிரதாப் பெரியண்ணன் பரம்பரை என்று கோவிலுக்கான விதிமுறைகள் கொண்ட பலகை கண்ணில் பட்டது. கோவிலில் மற்ற சன்னதிகளை பார்க்கலானோம்,அதில் சில சன்னதிகள் பலகை போன்ற வடிவில் கொண்ட நடுகல் போன்றவை வீற்றிருந்தது. ஒரு பெரியவர் லேசாக நடுங்கும் கைகளுடன்,கோவில் நிலைகளில் வடிக்கப்பட்டிருந்த தங்கத்தால் ஆன ராமம்,ஆழி,சங்கு அடங்கிய பகுதியை படம் பிடிக்க,பூசை முடிந்தவுடன் படம் எடுக்குமாறு அனுமதி மறுத்தான் கோவி...