Posts

சோழிய வேளாளர் கங்கை குலம் கிடையாது

Image
சோழநாட்டு சோழிய வேளாளர்கள் தங்களை எந்த காலத்திலும் கங்கை குலம் என்றோ கங்க வம்சம் என்றோ காராளர் என்றோ சொல்லிக்கொண்டதில்லை. சோழிய வேளாளர்கள் கங்கை குலம் கிடையாது. அப்படியிருக்க கங்கை குலம் காராளர் என சொல்லிக் கொள்ளும் கொங்கு வேளாளர்கள் சோழ நாட்டில் இருந்து குடியேறியவர்கள் என்று பரப்பப்படுகிறது. சோழராட்சியில் தொண்டமண்டலத்தில் இருந்து தான் வேளாளர்கள் குடியேறினர், அதனால் பொதுவாக சோழ நாடு என்று சொல்லல் ஆகாது. சோழர்கள் களப்பிரரை வீழ்த்தி செந்தலை எனும் சிற்றூரில் முடக்கினர். செந்தலை வேளாளர் தென்திசை வேளாளர் என்று எந்த காலத்திலும் சோழிய வேளாளர்கள் சொல்லிக் கொண்டதில்லை. களப்பிரர்கள் பல சாதிகளில் கலந்துவிட்டார்கள் ஈசநாட்டு கள்ளர் வல்லம்பர் முத்தரையர் வேட்டுவர் இடையர் என இத்தனை சாதிகளில் கலந்துவிட்டார்கள். மற்ற அனைத்து வேளாளர்களுக்கும் சுத்த சோழிய வேளாளர்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. மந்தை சோழிய வேளாளர்கள் என்பவர்கள் அவர்களுக்கென தனி சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்கள்,அவர்கள் சுத்த சோழியருடன் எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லை. கொடிக்கால் வேளாளர்கள் சோழிய வேளாளர்கள் கிடையாது. வெற்றிலை...

ஆதி அந்தணர்!

Image
 ஆதி அந்தணரா? அதென்ன ஆதி அந்தணர்! ஆதிகாமாட்சி அம்மன் எனது தம்பி செந்தில்வேலவனுக்கு பிறந்த நாள் என்பதால்,இன்று புலியஞ்சோலைக்கு அருகில் இருக்கும்,ஆதிஅன்னகாமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றோம். திங்கள்,வெள்ளி மட்டுமே கோவில் சன்னதிகள் திறந்திருக்கும் எனும் நேரப்பலகையை பார்த்தவுடன் மகிழ்ச்சி,ஏன்னென்றால் இன்று வெள்ளி. கோவில் நடை திறந்திருக்க சன்னதிகளும் திறந்திருந்தன,மற்ற நாட்களில் சன்னதிகள் மூடப்பட்டிருக்குமாம்! திரைகள் மூடப்பட்டு காட்சியளித்த சன்னதிகள்,எங்கள் கண்கள் பூசாரிகளை தேடியது.. காவி வேட்டி அணிந்த இளைஞர்கள்,சுத்தம் செய்வதும் பக்தர்களுக்கு பிராசாத உணவை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.  அப்பொழுது தான் பிரதாப் பெரியண்ணன் பரம்பரை என்று கோவிலுக்கான விதிமுறைகள் கொண்ட பலகை கண்ணில் பட்டது. கோவிலில் மற்ற சன்னதிகளை பார்க்கலானோம்,அதில் சில சன்னதிகள் பலகை போன்ற வடிவில் கொண்ட நடுகல் போன்றவை வீற்றிருந்தது. ஒரு பெரியவர் லேசாக நடுங்கும் கைகளுடன்,கோவில் நிலைகளில் வடிக்கப்பட்டிருந்த தங்கத்தால் ஆன ராமம்,ஆழி,சங்கு அடங்கிய பகுதியை படம் பிடிக்க,பூசை முடிந்தவுடன் படம் எடுக்குமாறு அனுமதி மறுத்தான் கோவி...

யார் சூத்திரர்?

Image
  சூத்திரர் என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட வர்ணம்.அதன்படி சூத்திரர்கள் தீட்டுசாதிக்காரர்கள். சூத்திரர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் போன்றவை ஆரியர்களின் மனநோய் கருத்துகள். பக்தி இலக்கிய காலம் முதல் கடந்த நூற்றாண்டு வரை சூத்திரர் சற்சூத்திரர் என சிலர் பெருமைப் பட்டு புத்தகமும் செய்யுளும் இயற்றிய வரலாறு உண்டு. அந்த வரலாறு சோழியர்களான சோழ வேளாளர்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால்,கடந்த நூற்றாண்டில் கூட ஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை என்று மூடத்தனம் மிக்க முட்டாள் கூட்டத்திற்கு பொடனியில் தட்டி உச்சிமயிர் சிலிர்க்க உரக்க சொல்லியவர்  மறைமலையடிகள். ஏன் சூத்திர வர்ணம் சோழியருக்கு பொருந்தாது? முற்கால சோழர் காலத்தில் இந்த சூத்திர வர்ணம் இருந்ததா என்றால் இல்லை.ஆனால்,தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சிலர் குலமக்கள் குடிமக்கள் தினைமக்கள் வினைமக்கள் போன்ற நால்வகை பகுத்தலை எழுதியுள்ளனர். அதில் குலமக்களின் படிநிலை அரசர்,அந்தணர்,வணிகர்,ஏனையோர்ஏனையோர் ஏனையோருக்கு பதில் வேளாளர் எப்பொழுது வந்தார்கள் என்று கேட்டால் எனக்கு தெரியாது. ஆனால்,முற்கால சோழர்களின் தலைநகரான,உறையூரில் சோழர்களின் கோ...

வேளாளர் - சிந்துசமவெளி

Image
நேற்றைய தினம் மதுரையை சேர்ந்த கார்காத்தார் சாதியை சேர்ந்த புலவர் கார்த்திக் ராஜா வின் காணொளியைப் பார்க்க நேர்ந்தது.அதில் அவர் கூறிய முக்கிய கருத்தாக பார்ப்பது வேளாளர் என்பது சூத்திரர் கு உரிய வர்ணம் என்பதைத் தான். கார்காத்தார் என்பவர்கள் வேளாளர் இல்லை என்பதற்காக வேளாளரை வர்ணமாக மாற்றுவது பல கேள்விகளையும்,சந்தேகத்தையும் எழுப்புகிறது. வேளாளர் இந்த பதம் HENRY HERAS ன் VELLALAS IN MOHENJADARO நூலில் தெளிவான சொற்பிறப்பியலை வரையறுத்து கூறியிருக்கிறார். இதில் கூறியிருப்பதாவது வேலன்,வேலாள்(singular) என்பது வேளாளர் இனத்தை சேர்ந்த ஒரு தனி ஆளையும் வேளீர் என்பது அந்த இனத்தை சேர்ந்தவர்களை மொத்தமாக,பன்மையில் (plural) வேளீர் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சொற்பிறப்பியல் ஒரு அடிப்படையான மூகாந்திரத்துடனும் அறிவுடனும்,வரையறுக்கப்பட்டிருக்கிறது. வேள்,வேளாள்,வேளீர் போன்றவை ஒரு இனத்தை சிந்துசமவெளியில் குறிக்க,  பிந்தைய தொல்காப்பியத்தில் வேளாளரை வர்ணமாக்கிய உரையாசிரியர்களை கண்டு நகைப்பே மிஞ்சுகிறது. வேள்,வேளாண்,வேளாளன் சூத்திரராக இருந்தால்,அவை சங்ககால சோழர்களுக்கு முடிசூடிய அரசபெயராக இருந்திருக்கும...

சோழர்களும் சிபி காளையும்

Image
தஞ்சை பெரிய கோவில் "சிந்துசமவெளியில் சோழர்கள்" என்ற கட்டுரையில் சோழர்கள் காளையை வழிபட்டவர்கள் என்று கூறியிருந்தோம். காளை சின்னமானது அதிகாரத்தையும் தலைமை பண்பையும் வலிமையையும் ஆண்மையையும் பிரதிபலிக்கும் வகையில் வழிபடப்பட்டிருக்கிறது. சிங்கம் காளை முதலியன மேலைநாட்டு சூரிய கடவுள்களில் முக்கியமானவை, இந்த பசுபதி சின்னத்தில் யோகநிலையில் இருக்கும் மனிதனை,சிவன் என்று சிலர் கருத்துகளை முன் வைத்தனர். ஆனால் இந்த மனிதன் பல இனங்களை வென்று முடிசூடிய அரசனாக தான் இருக்க முடியும். இம்முடி சூடிய அரசனே சோழன். வேளாளர்களிடம் கோவையில் எடுக்கப்பட்ட மரபணு ஆய்வில் 37.8% j2 DNA இருந்தது. அந்த மரபணு கொண்ட மக்கள் காளை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து,மத்திய கடல்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக இருந்திருக்கின்றனர். கடல்வழி நாகரிங்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களில் சோழர்களுக்கான பங்கு முக்கியமானது.மேலும் சோழர்களின் நீர் மேலாண்மை,நகர கட்டமைப்பு மற்றும் உழவில் முன்னோடியாக இருப்பதிலிருந்து,சோழர்கள் ஒரு உயர்நாகரிகத்தை கட்டமைத்த வம்சாவளியினர் என்றே நாம் புரிந்துகொள்ளமுடிகிறது. இவர்களுக்கும் காளைகளுக்குமான தொ...

சிந்துசமவெளியில் சோழர்கள்

Image
இந்த தகவல்கள் HENRY HERAS போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களின் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.அதில் உள்ள தகவல்கள் தொடர்ச்சியற்றதாக தனித்தனியாக இருப்பதனால், அதை நாம் தொடர்பு படுத்தி, கொண்டு வந்த தகவலாவது, சிந்துசமவெளி நாகரிகம் மீனவர்,பரவர்,வேளாளர் போன்ற பல இனக்குழுக்கள் வாழ்ந்த நாகரிகம்.அப்பகுதியில் வாழ்ந்த ஒவ்வொரு இனக்குழுவில் உள்ள  ஒவ்வொரு மரபிற்கும் கோழி,மீன்,காளை,சிங்கம்,யானை,ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் போன்ற பல அடையாளச் சின்னங்கள் இருந்தன. பசுபதி சின்னம் அந்த அடையாளச் சின்னங்களை படத்தில் காணலாம். சூரிய வம்ச வேளாளர்,சந்திர வம்ச வேளாளர் என சிந்துசமவெளியிலேயே இருபிரிவை கொண்டவர்கள் வேளாளர்கள்.  இரண்டு பிரிவுகளிலும் தனித்தனி மன்னர்களை குறிப்பிடுகின்றனர்.மற்ற இனக்குழுக்களுக்கு தலைவர் எனும் குறிப்புதான் கிடைக்கிறது மன்னர் என்ற யாதொரு குறிப்பும் இதுவரை கிடைக்கவில்லை. இதில் சூரிய வம்ச வேளாளர்களின் மன்னனாக மூமக குடை வேளாளரில் கொடி எனும் பெயர் இடம்பெறுகிறது, மேலும்,அதில் பல போர் வெற்றிகளை பற்றிய நிகழ்வுகளும் இடம்பெறுகிறது. அதில் ஒன்று, சிங்கம் மற்றும் காளை அடையாளத்...

சோழிய வேளாளர் : சோழியர் பெயர் காரணம்

Image
சோழிய வேளாளர்கள் முதலில் சோழிய எனும் சொல்லுக்கான பொருளையும் சொற்பிறப்பியலையும் பார்ப்போம். சோழியர் எனும் சொல் பொதுவாக சோழ வேந்தர்களையும் சோழிய வேளாளர்களையுமே குறிக்கும். இச்சொல்லானது,கோழி எனும் சொல்லில் இருந்து உருவானது தான். சோழ மன்னர்களை கோழி கோன் கோழியர் கோன் என சங்க இலக்கியம் முதல் பிற்கால சோழர்களான கண்டராதித்த சோழன் வரை அடையாளப்படுத்தி வந்துள்ளனர். எ.கா : "கோழி வேந்தன் தஞ்சையர் கோன் கண்டராதித்தன்" இதன் வழியாகவே கோழி - கோழியர் - சோழியர் - சோழர் என்று முற்றுகிறது. திருக்கோழியூர் என அழைக்கப்பெற்ற இன்றைய உறையூர்,திருச்சி உறையூர் - முற்கால சோழர் தலைநகரம் இதில் கோழி கோழியர் என்பதற்கான பொருள் கோழி எனும் பறவையை குறிப்பது கிடையாது. வடநாட்டில் இன்றும் கோழி எனும் பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். அந்த கோழி இனமக்களை போரிட்டு வென்றதாலையே கோழி கோன்,கோழியர் கோன் என பெயர் பெற்றனர்,காளையை வழிபடும் சோழ வேந்தர்கள். இன்று வடநாட்டில் கோலி பழங்குடி இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்,அந்த சமூகத்தின் தொழில் மீன்பிடித்தலும் உழவுத்தொழிலும். இந்த இனமக்களை போரிட்டு வென்ற வேளாளர்களே சோழிய வேளாளர்கள். இ...